மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்,… | Tamil Christian Message

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.ஏசாயா 54:10


For the mountains shall depart, and the hills be removed; but my kindness shall not depart from thee, neither shall the covenant of my peace be removed, saith the LORD that hath mercy on thee.

என் அன்புக்குறியவர்களே நாம் மேற்கண்ட வசனம் எத்தனை இனிமையானது என்று பாருங்கள்

குறிப்பிட்டு ஓர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் என் மனதை பாதித்தது அதை இந்த வேலையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

அழகிய பெண் குழந்தை பிறந்து ஐந்து தினங்களே நிறைவு பெற்றது அந்த குழந்தையின் தந்தை தாயின் கையிலிருந்து குழந்தையை பிடிங்கி வீட்டின் உள்ளே இருந்து வெளியில் தூக்கி வீசினான் எதிர் வீட்டு தாத்தா வீட்டு வாசலில் அமர்ந்து எதோவேலை செய்து கொண்டிருந்தார் எதிர்பாராமல் அவரை நோக்கி ஏதோ ஒரு பொருள் வருகிறது என்று உணர்ந்து கொண்டவர் சுதாரித்து எழுந்து அதை பிடித்துக் கொண்டார் சற்று நேர அமைதிக்குப் பின்னர் குழந்தை வீறு கொண்டு அழுதது அப்போதுதான் அது குழந்தை என்று புரிந்து கொண்டார் குழந்தை பிறந்து ஐந்து நாள் ஆன அந்த பச்சிளங்குழந்தை என்ன ஆகுமோ என்று யோசித்தார் இப்படி நடந்து முடிந்துவிட்ட இந்த நிகழ்வை அந்தப் பெரியவரால் நம்ப முடியவில்லை நடந்தது என்ன என்று யோசிப்பதற்குள் அந்தக் குழந்தையின் தாய் தலைவிரி கோலத்தோடு வீட்டின் வாசல் முன்பு வந்து ஐயோ என்னை காப்பாற்றுங்கள் விழுந்து சத்தமிட்டாள் அந்த முதியவர் கையிலிருந்த குழந்தையை மார்போடு அணைத்தபடி குழந்தையின் தாயாரை வலது கையினால் தூக்கி எடுத்து நிமிர்ந்து பார்த்தார் அவர் எதிரில் குழந்தையின் தந்தை கையில் அரிவாளுடன் கர்ச்சித்துக் கொண்டு நின்றார் ஆனால் அந்த முதியவரை மீறி தாயையும் சேயையும் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை ஆம் அந்த முதியவர் வலிமையான உடல் கொண்டவரும் ஒருகாலத்தில் பட்டாளத்தில் பணியாற்றியவருமானபடியால் அவரை எதிர்க்க இயலாமல் அவரை நோக்கி உன்னை வெட்டுவேன் குத்துவேன் கொலை செய்து விடுவேன் என்று கூறிக்கொண்டே மேற்கு திசையை நோக்கி ஓடி விட்டான்

நடந்ததை ஒன்றையுமறியாத அந்த ஐந்து நாள் குழந்தை முதியவரின் கையில் இருந்து தூங்கியது ,
குழந்தை பெற்று ஐந்தாம் நாளில் எழுந்து நடக்க முடியாத அந்தத் தாய் அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு சுமார் 7 மைல் நடந்து அவருடைய தாயார் வீட்டுக்கு சென்றாள்
அங்கேயே அந்த தாயார் அக்குழந்தையை அந்த அரக்கனுக்கு தெரியாமல் வளர்த்து பெரியவளக்கினாள்

அன்பானவர்களே இரக்கமில்லாத தந்தையின் கையிலிருந்து ஐந்து நாள் குழந்தையின் உயிரை அந்த முதியவர் மூலமாக காப்பாற்றப் பட்டவிதம் அங்கு சூழ்ந்திருந்த ஒருவராலும் நம்ப முடியவில்லை இது ஒரு அதிசயமாகவே உள்ளது அந்த முதியவர் மூலமாக தான் நான் இயேசுவை ஏற்றுக் கொண்டேன் அவர் என் தாயின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரியமானவர்களே இந்த உலகத்தில் உங்களுக்காக இரக்கம் பாராட்டவும் உங்கள் கண்ணீரைத் துடைக்கவும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார் ஆகவே ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் கவிதை போலவே ஒரு வாக்குத்தத்தத்தை அல்லது ஒரு உடன்படிக்கையின் உறுதிமொழியை இன்று உங்களைப் பார்த்து சொல்லுகிறார் அதைதான் நாம் மேற்கண்ட ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் 54 ஆம் அதிகாரம் 10 வசனம் குறிப்பிடுவது போல் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிறைவேறாமல் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் அன்பானவர்களே நேரடியாகவோ அல்லது பிறர் மூலமாகவோ உங்களுடைய தேவைகளை தேவனாகிய கர்த்தர் பூர்த்தி செய்வார் அவருடைய கிருபைக்காக காத்திருங்கள் அவர் உங்கள் மேல் மனதுருகி அற்புதம் செய்வார் உங்கள் வாழ்வு செழிக்கும் நீங்கள் மேன்மை யடைவீர்கள்

ஜெபம் செய்வோம்

ஜெபம்
அன்பின் பரலோக தந்தையே இன்று நீர் எங்களோடு பேசிய இந்த நல்ல வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம் நீர் என்னை கைவிடமாட்டீர் என்று விசுவாசிக்கிறேன் என்மேல் மனமிரங்கி என்னை ஆசீர்வதியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மன்றாடுகிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

Message By,
Dr.S.P.Raja
Consolation Ministries
Follow : Click Here